கட்சியை கலைத்து விட்டு வேறொரு கட்சியில் சேர தன்னிடம் ஒரு கட்சி பேரம் பேசியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மக்கள் நீதிமய்யம் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்டது. கிராமங்களை மேம்படுத்த முதல் கட்டமாக 8 கிராமங்களை தத்து எடுத்துள்ளோம். அரசியல் சார்பில்லாத சமூக ஆர்வலர்களிடமிருந்து நான் பல விஷயங்களை கற்று வருகிறேன். ஊழலை முதலில் வேரறுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். சிறையில் இருப்பவர் சுதந்திரமாக வெளியே ஷாப்பிங் செல்கிறார். 2 நாட்கள் அதை பற்றி பேசிவிட்டு பின்னர் மறந்து விடுகிறோம்.
எனக்கு லஞ்சம் கொடுக்க கூட ஒரு கட்சி பேரம் பேசியது. அவர்கள் கட்சியில் சேர ரூ.100 கோடி கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், அதை நான் ஏற்க மறுத்துவிட்டேன். மக்கள் என்னைப் போன்றவர்களை நம்ப வேண்டும். இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என அவர் பேட்டியளித்தார்.