Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை பார்த்தோம்; செல்லூர் ராஜூ பேட்டி : மறுபடியும் முதலில் இருந்தா?

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (11:05 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அனைத்து அமைச்சர்களும் அவரைப் பார்த்தோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


 

 
சமீபத்தில் ஒரு விழாவை பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நாங்கள் யாரும் அவரை சந்திக்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம். எங்களை மன்னித்துவிடுங்கள். சசிகலா தரப்பு கூற சொன்னதையே நாங்கள் மக்களிடம் கூறினோம். யாரேனும் ஜெ.வை சந்தித்தால், அவர் எப்படி கொல்லப்படுகிறார் என்பதை கூறிவிடுவார் என்பதால், அவரை யாரும் சந்திக்காமல் சசிகலா தரப்பு தடுத்து வந்தது எனக் கூறியிருந்தார்.
 
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்படியெனில் பொய்யான தகவல்களை பரப்பிய அனைத்து அமைச்சர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு ‘மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அமைச்சர்கள் அனைவரும் அவரை பார்த்தோம்” எனக் கூறினார்.


 

 
திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், அதற்கு முற்றுபுள்ளி வைப்பதற்காகவே செல்லூர் ராஜூ இப்படி கருத்து தெரிவித்துள்ளார். எந்த அமைச்சர்களும் ஜெ.வை சந்திக்கவே இல்லை என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதோடு, மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு அமைச்சர்கள் மாறி மாறி பேசி வருகின்றனர். அமைச்சர்களின் மாறுபட்ட இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, ஆட்சி மற்றும் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே இப்படி அவர்கள் பேசி வருகின்றனர் எனவும் பலர் கருத்து கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments