Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபக் பேட்டியில் ஏகப்பட்ட ‘பீப் ’சவுண்ட் - நடந்தது என்ன?

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (10:47 IST)
ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஏகப்பட்ட ‘பீப்’ ஒலி கொடுக்கப்பட்டது.


 

 
மறைந்த ஜெ. வின் மரணத்தில் உள்ள சந்தேகம், பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அவரின் அண்ணன் மகன் தீபக் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். 
 
அதில், ஜெயலலிதா 3 நாட்கள் மட்டுமே சுய நினைவோடு இருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கான இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அகற்றப்பட்டது. அவரை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. ஆளுநர் வித்யாசாகர் வந்தபோது கூட அவர் சுயநினைவின்றியே இருந்தார் என்பது உட்பட பல பரபரப்பான தகவல்களை அவர் கூறினார்.
 
அதே சமயம் தினகரனை பற்றி பேசும் போது அவர் மிகவும் கோபமாக காணப்பட்டார். தினகரன் எந்த காரணம் கொண்டும் பொறுப்பிற்கு வரவே கூடாது என அவர் தெரிவித்தார். அப்போது, சில அநாகரீமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். அதனால், நிறைய ‘பீப்’ ஒலி கொடுக்கப்பட்டது. 
 
அதோடு அவர் மதுபோதையில் அந்த பேட்டியை கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments