Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.விற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு எப்போது அகற்றப்பட்டது? - தீபக் தரும் பதில்

ஜெ.விற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு எப்போது அகற்றப்பட்டது? - தீபக் தரும் பதில்
, செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (09:34 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்னன் மகன் தீபக் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார்.


 

 
உடல்நலக்குறைபாடு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அவரை சந்திக்க சசிகலா தரப்பு ஆளுநர், அமைச்சர்கள் உட்பட யாரையும் அனுமதிக்காததே அதற்கு காரணமாகும்.
 
தற்போது அவரின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணைக் கமிசனை தமிழக அரசு அமைத்துள்ளது.
 
இந்நிலையில், ஜெ.வின் அண்ணன் மகள் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
ஜெ. மருத்துவமனையில் இருந்த போது மூன்று நாட்கள் மட்டுமே சுயநினைவில் இருந்தார். அவரை பார்க்க யாரையும் சசிகலா தரப்பு யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், அவரை சசிகலா நன்றாக கவனித்துக்கொண்டார். ஜெ.விற்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக என்னிடம் எந்த ஆவணத்திலும் மருத்துவமனை நிர்வாகம் கையெழுத்து பெறவில்லை. ஆளுநர் வித்யாசகர் வந்த போது கூட ஜெயலலிதா சுய நினைவின்றிதான் இருந்தார்.
 
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே அவருக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அது ஏன்? அதற்கு யார் காரணம்? எனத் தெரியவில்லை.
 
ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு தர வேண்டும்” என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ.பி.எஸ் போன்ற அரசியல்வாதிகள் தேவையில்லை - மக்கள் சர்வே