Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி!

நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி!

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (09:36 IST)
குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கில், நேற்றைய விசாரணையில் நடிகர் ஜெய் ஆஜராகாததால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 
 
சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய், கடந்த மாதம் 21-ஆம் தேதி குடி போதையில் தன்னுடைய விலை உயர்ந்த ஆடி காரை அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
 
அவருடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார். யாருக்கும் அடிபடவில்லை என்றாலும், போதையில் இருந்ததால் அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. ஜெய் ஏற்படுத்திய விபத்து குடிபோதையில் நடைபெற்றது என்பதால் எவ்வித சமரசமும் இல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து கைது செய்து ஜாமீனில் விடுவித்தது காவல்துறை.
 
அந்த வழக்கின் விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விசாரணையின்போது ஜெய் நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிகையின் நகலைப் பெற்றுக் கொண்டார். மீடியாவில் சிக்க கூடாது என்பதற்காக முன்னதாகவே யாருக்கும் தெரியாமல் நீதிமன்றத்திற்கு வந்த ஜெய், தன்னுடைய காரில் காத்திருந்தார்.
 
மீடியாக்கள் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பிறகு வேகமாக நீதிமன்றத்திற்குள் சென்று, குற்றப்பத்திரிகையின் நகலை வாங்கி உடனே காரில் ஏறி சென்றுவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை, நேற்றும் நடைபெற்றது.
 
ஒரு சினிமா நட்சத்திரத்துக்கு நீதிமன்றம் என்ன தண்டனை வழங்க உள்ளது என்பதை தெரிந்துகொள்ள ஊடகங்கள் நேற்று ஜெய் வரும் முன்னரே காத்திருந்தன. ஆனால் நடிகர் ஜெய் கடைசி வரை வராமலே போனார். இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் ஜெய் ஆஜராகாத்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments