Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு இன்று பரோல்: அரசியல் தலைவர்களை சந்திக்க தடை?

சசிகலாவுக்கு இன்று பரோல்: அரசியல் தலைவர்களை சந்திக்க தடை?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (08:53 IST)
கடந்த சில தினங்களாக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த சசிகலாவுக்கு சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதால், அவர் பரோலில் வெளியே வர உள்ளது உறுதியாகியுள்ளது. சசிகலா இன்று சில நிபந்தனைகளோடு பரோலில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் மனு அளிக்கப்பட்டது.
 
அதில் போதிய ஆவணங்கள் இல்லை என கூறி அவரது மனு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சில ஆவணங்களை இணைத்து பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. இதனையடுத்து சசிகலா பரோல் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது கர்நாடக சிறைத்துறை.
 
இந்த தடையில்லா சான்றிதழ் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்று அளித்துள்ளதாக கர்நாடக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சசிகலா பரோலில் வெளிவருவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
 
சசிகலா நேற்று மாலையோ அல்லது நாளை காலையோ பரோலில் வெளிவரலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இன்று காலை வருவார் என சசிகலா தரப்பு புகழேந்தி கூறியுள்ளார். இதனையடுத்து பெங்களூர் சென்றுள்ள தினகரன் சென்னை வர உள்ள சசிகலாவை எங்கு தங்க வைக்கலாம் என ஆலோசித்து வருகிறார்.
 
மேலும் சசிகலா பரோலில் வரும்போது அவருக்கு நிபந்தனையாக அரசியல் தலைவர்களை சந்திக்க கூடாது, குடும்ப உறுப்பினர்களை மட்டும் சந்திக்கலாம் என்ற நிபந்தனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை என தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் சசிகலாவின் பரோல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை. நேற்று விடுமுறை என்பதால் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படவில்லை. இன்று கண்டிப்பாக பரோல் கிடைத்துவிடும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

பெண் அமைச்சரை கொச்சையாக பேசிய வழக்கு: கைதான ஒரே நாளில் சிடி ரவிக்கு ஜாமீன்..!

சென்னையில் இருந்து 390 கிமீ-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பா?

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments