Publish Date: Tue, 16 Nov 2021 (13:20 IST)
Updated Date: Tue, 16 Nov 2021 (13:21 IST)
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த வாரம் வரை தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு தற்போதுதான் மீண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது