Publish Date: Tue, 16 Nov 2021 (13:00 IST)
Updated Date: Tue, 16 Nov 2021 (13:02 IST)
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நவம்பர் 18 அன்று சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. தற்போது நிலைமை சீராகியுள்ள நிலையில் மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எதிர்வரும் 18ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிக பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.