Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தளபதி டிவி.. புதிய சேனல் ஆரம்பிக்கிறார் விஜய்.. யாருடைய சேனல் தெரியுமா?

Advertiesment
vijayy

Mahendran

, வியாழன், 8 பிப்ரவரி 2024 (12:43 IST)
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக அவர் தளபதி டிவி என்ற தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் இந்த கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரச்சாரங்கள் ஆகியவற்றிற்காக தொலைக்காட்சி சேனல் ஒன்று தேவைப்படுகிறது. 
 
இதற்காக ஏற்கனவே விஜயகாந்த்தின் கேப்டன் டிவி என்ற டிவியை சேனலை விஜய் விலைக்கு வாங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  விஜய் தனது பெயரில் ஒரு சேனல் ஆரம்பிக்க முடிவு செய்த நிலையில் ஏற்கனவே விஜய் டிவி என்று இருப்பதால்தான் தற்போது தளபதி டிவி என்ற பெயரில் ஆரம்பிக்க இருப்பதாகவும் இந்த சேனல் திறப்பு விழா குறித்த தகவல் வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
புதிதாக ஒரு சேனலை தொடங்குவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் ஏற்கனவே இயங்கி வரும் கேப்டன் டிவி சேனலை அவர் விலைக்கு வாங்க இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்.ஐ.ஏ முன் ஆஜர்.. தீவிர விசாரணை என தகவல்..!