சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன் இன்று ஆஜராகி உள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகியோர் என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய விசாரணைக்கு பின்னரே என்.ஐ.ஏ அதிகாரிகளின் நடத்தப்பட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும் தெரியவரும்.