Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதியின் வேண்டுகோள்

Advertiesment
7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதியின் வேண்டுகோள்
, வெள்ளி, 30 நவம்பர் 2018 (12:59 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேர்கள் சிறைக்கு சென்று இன்றுடன் 28 ஆண்டுகள் முடிவடைகின்றது. இதனையடுத்து டுவிட்டரில் #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக் வைரலாகி அதில் பல கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் 'ராஜீவ் கொலையாளிகள் 7 பேர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய கருணை கூர்ந்து முடிவெடுங்கள் என தமிழக கவர்னருக்கு நடிகர் விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த ஹேஷ்டேக், தமிழக கவர்னரின் கவனத்துக்கு செல்லும்வரை வைரலாக்குவோம் என்று பலர் இந்த ஹேஷ்டேக்கில் கருத்துக்களை பதிவு செய்து வருவதால் இந்த ஹேஷ்டேக் சென்னை டிரண்டில் உள்ளது. இந்த ஹேஷ்டேக் ஏழு பேர் விடுதலைக்கு உதவுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவரா புகழாதீங்கப்பா!! புல்லரிக்குது: ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் பொன்.மாணிக்கவேல் கலகல