பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தெரியாது எனக் கூறிய ரஜினியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த சினிமா படங்களில் நடித்து வருகிறாரே தவிர அரசியல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வந்த பாடில்லை. நானும் அரசியலுக்கு வருவேன் என்ற போக்கில் அவ்வப்போது தேவையான சமயங்களில் மட்டும் சில கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்னெடுத்து வைக்கிறார்.
இந்நிலையில் நேற்று ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார். இதனால் சமூக வலைதளத்தில் பலர் ரஜினியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் சமீபத்தில் ரஜினியின் #ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது அனைவருக்கும் தெரிந்ததே.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது #ரஜினிக்கு தெரியாது என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அவற்றுள் சில...