அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

Mahendran
வெள்ளி, 18 ஜூலை 2025 (12:36 IST)
அதிமுக கூட்டணி குறித்து தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்று கேட்கப்பட்டபோது, "சட்டசபை தேர்தலில் எதிர்கொள்ள நாங்கள் கையாளும் தந்திரங்களையும், வியூகங்களையும் வெளியில் சொல்ல முடியாது" என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில், அதிமுக கூட்டணி குறித்து எழும் விமர்சனங்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இதனை அடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்பது உண்மைதான் என்றும், பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டால் அதிமுக கூட்டணிக்கு விஜய் வரத் தயாராக இருப்பதாகக் கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments