தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் யுபிஎஸ்சி ஆலோசனை.. இன்று இறுதி செய்ய வாய்ப்பு..!

Mahendran
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (13:26 IST)
தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி யார் என்பது குறித்து இன்று இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ்நாடு டிஜிபி தொடர்பாக டெல்லியில் யுபிஎஸ்சி ஆலோசனை செய்து வருவதாகவும், இந்த ஆலோசனையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை செயலாளர் என். முருகானந்தன், உள்துறைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தமிழ்நாட்டில் புதிய டிஜிபி பதவிக்கு தகுதியான மூன்று பேரை யுபிஎஸ்சி இன்று இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இறுதி செய்யப்படும் மூன்று பேரில் ஒருவரை தமிழ்நாடு டிஜிபி-யாக தமிழ்நாடு அரசு நியமிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 30ம் தேதியோடு ஓய்வு பெற்ற நிலையில் தற்போது இடைக்கால டிஜிபி மட்டுமே பதவியில் இருப்பதால், புதிய டிஜிபி இன்று இறுதி செய்யப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments