Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து.! சமூக நீதிக்கு வெற்றி - முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு.!

Senthil Velan
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (21:14 IST)
மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி  நியமனத்துக்கான நடைமுறை ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி, யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
 
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சமூக நீதிக்கு வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 
ஆனால், மத்திய பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டைக் குறைவான மதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி..! விஜய்க்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை..!!
 
இடஒதுக்கீட்டின் தன்னிச்சையான 50 சதவீத உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments