Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவர் மத்திய அமைச்சரானால் காவிரி நதி நீருக்கு பாதிப்பு..! - சோமண்ணாவை நீக்க வலியுறுத்தும் காங்கிரஸ்!

Sommanna

Senthil Velan

, செவ்வாய், 11 ஜூன் 2024 (12:50 IST)
தமிழ்நாட்டு உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிற கர்நாடகவை சேர்ந்த சோமண்ணாவை ஜல்சக்தி பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
 
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்,  இன்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றதற்காக தீவிரமான பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் ஜல்சக்தி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சராக சோமண்ணா பதவியேற்றி இருப்பது, காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.


எனவே தமிழ்நாட்டு உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிற கர்நாடகவை சேர்ந்த சோமண்ணாவை ஜல்சக்தி பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் திடீர் மாற்றம்: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..!