Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்களுக்கு குட் நியூஸ்.! கல்விக்கடன் தொகை உயர்வு..!

Advertiesment
Education Loan

Senthil Velan

, செவ்வாய், 11 ஜூன் 2024 (12:05 IST)
கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
 
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். 
 
முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடனைப் பெறலாம் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.


புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒடிசாவின் புதிய முதல்வர் யார்? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!