Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை சந்தித்த போது என்ன நடந்தது? அமைச்சர் உதயநிதி பேட்டி..!

Mahendran
வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:34 IST)
பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்த நிலையில் இந்த சந்திப்பின் போது என்ன நடந்தது என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்த மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் இந்த விளையாட்டுப் போட்டி துவக்க விழாவுக்கு வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து  அழைப்பிதழை தந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்

ALSO READ: இலாகா இல்லாத அமைச்சர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

மேலும் முதலமைச்சரின் சார்பில் வழங்கப்பட்ட அழைப்பு கடிதத்தையும் பிரதமரிடம் கொடுத்ததாக அமைச்சர் உதயநிதி கூறினார். மேலும் திருச்சியில் நடந்த விழாவின்போது முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும்  அவரது பாதயாத்திரைக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தூத்துக்குடி வெள்ளம் குறித்து நிலவரங்களை ராகுல் காந்தி கேட்டார் என்றும் அவரிடம் விரிவாக தான் விளக்கியதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments