இலாகா இல்லாத அமைச்சர் விவகாரம்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Mahendran
வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:28 IST)
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்
 
இந்த நிலையில் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார் என விளக்கம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி கூறியதோடு செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும்  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஒரு அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறிய உச்ச நீதிமன்றம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதி அறிவுரை..!

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.32 லட்சம்.. யார் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள்?

அவங்களை பாத்து ஆறுதல் சொல்லணும்! மீண்டும் கரூர் செல்லும் விஜய்? - நிர்வாகிகளுடன் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments