Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மாணவரை தாக்கிய ஏபிவிபி கும்பல்! – உடனே போன் போட்ட உதயநிதி!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (12:32 IST)
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழ்நாட்டு மாணவர் ஏபிவிபி அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி, எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அவ்வபோது மாணவ அமைப்புகளிடையே ஏற்படும் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நாசர் என்ற மாணவரை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: உதயநிதி காட்டிய அதே செங்கல்.. ஈரோட்டில் அண்ணாமலையின் பதிலடி பிரச்சாரம்..!

இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன் இட்டுள்ள பதிவில், ஏபிவிபி அமைப்பினரால் தமிழ்நாட்டு மாணவர் நாசர் தாக்கப்பட்ட விவகாரம் தெரிய வந்ததும் மாணவரின் எண் கிடைத்ததும், இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்ததாகவும், உடனடியாக மாணவருக்கு வீடியோ கால் செய்த உதயநிதி ஸ்டாலின் மாணவருக்கு ஆறுதல் கூறியதுடன், தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவருடன் உதயநிதி பேசும் வீடியோவையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments