உதயநிதி காட்டிய அதே செங்கல்.. ஈரோட்டில் அண்ணாமலையின் பதிலடி பிரச்சாரம்..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (12:20 IST)
உதயநிதி காட்டிய அதே செங்கல்.. ஈரோட்டில் அண்ணாமலையின் பதிலடி பிரச்சாரம்..!
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு செங்கலை எடுத்துக்காட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலின் போது தர்மபுரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது என்றும் 14 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என்றும் செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார்.
 
தேர்தல் முடிந்தவுடன் இந்த செங்கலை நான் உதயநிதி  ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்டி முடிக்கப்படும் என்றும் அந்த பணி முடிந்ததும் அவரிடம் உள்ள செங்கல் திருப்பி பெறப்படும் என்றும் அதேபோல் தர்மபுரி தொழிற்பேட்டையை அமைத்துவிட்டு நான் தரும் செங்கலை உதயநிதி திருப்பி தரட்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்? வானிலை எச்சரிக்கை..!

பெங்களூரு-ஓசூர் மெட்ரோ இணைப்பு திட்டம் சாத்தியமில்லை.. கைவிரித்த கர்நாடக அரசு..!

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments