Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?

Mahendran
வியாழன், 13 பிப்ரவரி 2025 (14:02 IST)
உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
 
சமீபத்தில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், மரியாதை நிமித்தமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
"மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று, அரசியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்."
 
ஏற்கனவே, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். மேலும், திமுக சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது: ஆர்எஸ் பாரதி

கோவில்பட்டி வந்த சபாநாயகர் அப்பாவுக்கு கறுப்புக்கொடி.. கிராம மக்கள் ஆவேசம்..!

மதுபான வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல்.. தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வர திட்டம்.. ஒரே நாடு ஒரே கோவில் நிர்வாகமா?

அடுத்த கட்டுரையில்
Show comments