Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? அண்ணாமலை கேள்வி..!

Advertiesment
Annamalai

Mahendran

, வியாழன், 13 பிப்ரவரி 2025 (13:46 IST)
தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
பிரதமர் மோடி நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018- 2019ம் ஆண்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி தொடர்பாக, சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி.
 
தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்
 
ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Keltron நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது.
 
தமிழகம் முழுவதும், கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்? கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது?
 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி, தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது: ஆர்எஸ் பாரதி