Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 கொடுத்தால் ரூ.2000: திருப்பூரில் நூதன மோசடி செய்த இளைஞர்கள்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (09:26 IST)
திருப்பூர் பகுதியில் அதிக வருமானம் இன்றி கஷ்டப்படும் நடுத்தர மக்களை குறிவைத்த இரண்டு இளைஞர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரண்டாயிரம் தருவதாக கூறியுள்ளார். தாங்கள் ஒரு சமூக அமைப்பில் இருந்து வருவதாகவும் உதவி செய்யும் மனப்பான்மையுடன் இதை செய்வதாகவும் கூறியுள்ளனர்.

ஒருசிலர் ஆயிரம் ரூபாய் கொடுத்து இரண்டாயிரம் பெற்றாலும் ஒருசிலர் இந்த இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். இதில் ஹாரூன் என்பவர் இதுகுறித்து போலீசுக்கு  தகவல் செய்ய உடனடியாக விரைந்து வந்த போலீசார் இரண்டு இளைஞர்களையும் பிடித்து விசாரித்தனர்

விசாரணையில் சதீஷ் மற்றும் ராஜ்குமார் என்ற அந்த இரண்டு இளைஞர்கள் வீராணம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள்  2 ஆயிரம் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கள்ளநோட்டை அச்சடிக்க இருவரும் பயன்படுத்திய ஸ்கேனர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments