Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை அருகே 16 வயது மாணவி கொலை – இரட்டையர்கள் செய்த கொடூர செயல் !

மதுரை அருகே 16 வயது மாணவி கொலை – இரட்டையர்கள் செய்த கொடூர செயல் !
, வியாழன், 17 அக்டோபர் 2019 (08:05 IST)
மதுரையில் 11 ஆம் வகுப்பு மாணவி ஊர் திருவிழாவுக்கு வந்தபோது இரட்டை சகோதரர்கள் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்த சம்பபவம் நடந்தேறியுள்ளது.

மதுரை உசிலம்பட்டி அருகே ஓனாம்பட்டி என்ற கிராமத்துக்கு ஊர்த்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக 11 ஆம் வகுப்புப் படிக்கும் அந்த மாணவி வந்துள்ளார். இந்நிலையில் வந்த இரண்டாவது நாள் பம்ப் செட்டுக்குத் தண்ணீர் எடுக்க சென்ற அவரைக் காணவில்லை.  போலிஸார் மற்றும் உறவினர்கள் தேடலில் அவரது உடல் மறைவானப் பகுதியில் உள்ள புதருக்கடியில் இருந்து மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இது சமம்ந்தமாக மாதவன் எனபவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போது தாங்கள் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்ததாகவும் ஆனால் அவர் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்து விட்டதாகவும் அதனால்தான் கொலை செய்ததாகவும் கூறினார். ஆனால் அடுத்தக் கட்ட விசாரணைகளில் மாதவனும் அவரது இரட்டைத் தம்பியும் சேர்ந்து அந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுப் பின்னர் கொலை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்தியையும் என்னையும் சந்தேகப்பட்டார் சித்தப்பா – புழல் கொலையில் குற்றவாளி வாக்குமூலம் !