Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தேகப் பேய் பிடித்த கணவன் – தோசை மாவில் மயக்க மருந்தைக் கலந்து மனைவி செய்த கொடூரம் !

Advertiesment
சந்தேகப் பேய் பிடித்த கணவன் – தோசை மாவில் மயக்க மருந்தைக் கலந்து மனைவி செய்த கொடூரம் !
, புதன், 16 அக்டோபர் 2019 (08:28 IST)
சென்னை, புழல் பகுதியில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தோசை மாவில் மயக்க மருந்து கலந்துகொடுத்து கொலை செய்துள்ளார் மனைவி.

சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு அனுஷியா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்ட அவர்கள் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். சுரேஷ் கறிக்கடை ஒன்றிலும் அனுஷியா மெடிக்கல் ஷாப் ஒன்றிலும் வேலைப் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அனுஷியா அதிக நேரம் தனது அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்ததால் அவருக்கு வேறு யாருடனுடனோ தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்டுள்ளார் சுரேஷ்.  இது சம்மந்தமாக அனுஷியாவிடம் அடிக்கடி சண்டை வளர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் சுரேஷின் தொல்லை தாங்காத அனுஷியா தோசை மாவில் மயக்க மருந்து கலந்து அவருக்குக் கொடுத்துள்ளார்.

மயங்கிய அவரை படுக்கையில் படுக்கவைத்து விட்டு தனது நெருங்கிய நண்பரான முரசொலி மாறன் என்பவரை வரவழைத்துள்ளார். அவரின் உதவியோடு சுரேஷை கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் சுரேஷ் குடி போதையில் இறந்துவிட்டதாக உறவினர்கள் மற்றும் நண்பர்களை நம்பவைத்துள்ளார். ஆனால் போலீஸ் விசாரணையில் சுரேஷை அனுஷியாதான் கொலை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரும் அவரது நண்பர் முரசொலி மாறனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெர்மனில் இருந்து வாட்ஸ் ஆப்பில் பரவிய குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை !