Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக மரபைதான் கடைப்பிடிக்கணும்! - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

Prasanth Karthick
திங்கள், 6 ஜனவரி 2025 (15:06 IST)

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளுநர்கள் மாநில அரசின் மரபை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

 

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

 

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

 

எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

பெங்களூரை அடுத்து குஜராத்திலும் பரவிய எச்.எம்.பி.வி. பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு;

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்கள் அதிகம்!

ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக மரபைதான் கடைப்பிடிக்கணும்! - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

கவர்னரின் செயல் கூட்டாட்சி மாண்பிற்கே விரோதமானது: ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments