Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூத்துகுடியில் பேருந்துகளை இயக்குவது எப்போது? புதிய கலெக்டராக பொறுப்பேற்ற சந்தீப் தகவல்

தூத்துகுடியில் பேருந்துகளை இயக்குவது எப்போது? புதிய கலெக்டராக பொறுப்பேற்ற சந்தீப் தகவல்
, வியாழன், 24 மே 2018 (19:55 IST)
தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு காரணமாக அம்மாவட்டத்தின் கலெக்டராக இருந்த வெங்கடேஷ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துகுடியின் புதிய கலெக்டராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றுள்ளார். கலெக்டர் பொறுப்பேற்றவுடன் தூத்துகுடி நகரத்தின் நிலவரம் குறித்து அவர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 
தூத்துக்குடியில் அம்மா உணவகம் 24 மணி நேரமும் திறக்க முடிவு. ரேஷன் கடைகள் திறந்துவைக்கவும் உத்தரவு. மேலும் மதுரையில் இருந்து காய்கறிகள் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் 
 
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை. மேலும் ஆலையை மூடும் முன் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
 
தூத்துக்குடியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குவது பற்றி நாளை முடிவு செய்யப்படும்
 
webdunia
தூத்துகுடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் மற்றும் 83 பேர் காயம் அடைந்துள்ளனர்.
 
தூத்துகுடியில் கடந்த 2 நாட்களில் ரூ.1.27 கோடி மதிப்பிலான வாகனங்கள் சேதம்
 
தூத்துகுடியில் மீண்டும் இயல்பு நிலைமையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்
 
இவ்வாறு தூத்துகுடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சி: பளார் வாங்கிய மந்திரி