மாவீரர்களுக்கு வீர வணக்கம்...

வியாழன், 24 மே 2018 (13:56 IST)
தோட்டாக்களை எதிர்கொண்ட உங்கள் நெஞ்சம் எல்லாம் பொன்மயம்
 
வீழ்த்தவர் எல்லாம் மடிந்தவர் அல்ல
மாவீரர்கள் மண்டி இடுவதும் இல்லை !
மடிவதும் இல்லை !
மரணம் அவர்களுக்கு புதிதும் இல்லை !
 
வீரம் நிறைந்தது சென்றவர் வாழ்க!
வீரம் இவ்விடம் சூழ பிறந்தவர் வாழ்க!
கடல் தொடும் ஆறாய் ,
தரை தொடும் தாரையாய், சென்றவர் வாழ்க !
அரசு நின்று கொன்றவர் வாழ்க !
 
செங்கதிர் நம் மேனி தீண்டும் போதெல்லாம் 
தீக்கதிர் ஜூவாலை நம்மை உரசும் போதெல்லாம் 
பேசுவோம் உம் வீரத்தை!
 
உப்பிட்டு சாப்பிடும் நேரம் எல்லாம் உம் வீரம் பேசுவோம்
குண்டுகள் தாங்கிய உங்கள் நெஞ்சத்தின் வலிமையை பேசுவோம் !
 
நிழல் ஆட்சியில் உங்களின் நிஜங்களை பேசுவோம் !
 
மாண்டவர்கள் சுவாசங்கள் காற்றுடன் சேர்க !
தூயவர்க் கண்ணொளி சூரியனுடன் சேர்க !
பூதங்கள் ஐந்திலும் உம்பொன் உடல் சேர்க !
உம் வீரம் மட்டும் எம்முடன் சேர்க !
 
இணையம் முடக்கி போகலாம்!
உங்கள் சுவாசங்கள் முடங்கி போகவில்லை
மீண்டும் பிறப்பாய் தமிழனாய்! வீரனாய் !
 
இரா.காஜாபந்தாநவாஸ்
[email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் புற்று நோய் பாதிப்பை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!