Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது..! திமுக வழக்கு குறித்து அண்ணாமலை விமர்சனம்..!!

Advertiesment
annamalai

Senthil Velan

, வியாழன், 14 மார்ச் 2024 (17:25 IST)
மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்களே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார் என்றும் ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதலமைச்சர் அவர்களே? மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று அவர் கூறியுள்ளார். 


தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாபர் சாதிக்கின் குடோனிற்கு சீல்..! முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்.!!