Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன் குறித்து கேலி சித்திரம்! – திரௌபதி பட ஓவியர் கைது!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (09:40 IST)
திருமாவளவன் குறித்து கேலிசித்திரம் வெளியிட்ட திரௌபதி பட ஓவியர் கைது செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திமுகவினர் சிலர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கூட்டணியில் உள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவிக்காமலே இருந்து வந்தார்.

இதுகுறித்து திரௌபதி படத்தில் ஓவியராக பணிபுரிந்த சுரேந்திரகுமார் கேள்வி எழுப்பி வந்துள்ளார். தற்கால அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் கணக்கில் அரசியல் கேலி சித்திரங்கள் வரைந்து வெளியிட்டு வந்த அவர், திருமாவளவனின் மௌனம் குறித்து முன்னர் வரைந்த கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது விடுதலை சிறுத்தை கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது.

இதுபற்றி காவல்நிலையத்தில் விசிக வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள ஓவியர் சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் திருமாவளவனை கேலி செய்ததற்காக கைது செய்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மிக கேவலமாக சித்தரிக்கும் ஓவியர்களை கைது  செய்வதில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments