கர்நாடகா மாநில எல்லைக்குள் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில மக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஐ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 37 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு பேருந்து தொடங்குவது குறித்து முதல்வர் எடியூரப்பா அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 பேர்களை மட்டும் கொண்டு பேருந்துகளை இயக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேலும் ஒரு முடிவாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மே 31 வரை கர்நாடகா எல்லைக்குள் வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த மாநிலங்களில் அதிகமாகக் கொரோனா பாதிப்பு இருப்பதாலும் இங்கிருந்து வருபவர்களால் கொரோனா பரவுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.