கந்துவட்டி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

Senthil Velan
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (17:16 IST)
கந்துவட்டி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தில் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டி கும்பலிடம் சிக்கும் ஏழைகள் உயிரைவிடும் கொடூரம் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.  இந்நிலையில் கந்துவட்டிக்காக நிறுவனத்தைக் கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில்,  ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதற்காக ரூ. 2 கோடி வரை கொடுத்துள்ளேன் எனத் மனுதாரர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, தென்மாவட்டங்களில் கந்துவட்டி பிரச்சினையில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன என்று வேதனை தெரிவித்தார்.

ALSO READ: 2 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.! ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல்.!!

கந்து வட்டி கும்பல் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும் எனத் நீதிபதி கூறினார். மேலும் கந்து வட்டி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments