முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிமைப் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்ததாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது புகார் எழுந்தது.
இதை அடுத்து பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்த யுபிஎஸ்சி, வரும் காலங்களிலும் அவர் தேர்வெழுத தடை விதித்தது. இந்த முறைகேடு தொடர்பாக யுபிஎஸ்சி கொடுத்த புகாரின் பேரில் பூஜா மீது டெல்லி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கர், முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும்வரை பூஜா கேத்கரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்திரவிட்டது. மேலும் டெல்லி காவல்துறை, யுபிஎஸ்சி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.