Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் மரணம்! – கரூரில் அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் மரணம்! – கரூரில் அதிர்ச்சி சம்பவம்!
, திங்கள், 22 நவம்பர் 2021 (11:30 IST)
கரூரில் வேன் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களை துரத்தி சென்ற சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு கரூரில் போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார், அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேனை தடுத்து நிறுத்த முயன்றபோது வேகத்தை குறைக்காமல் வந்த வேன் கனகராஜை மோதி தள்ளிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் கனகராஜ் மரணமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் தொல்லை; துணிந்து புகாரளித்த மாணவிகள்! – கம்பி எண்ணும் ஆசிரியர்!