Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி சேர்ப்பு! – தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!

பள்ளி மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி சேர்ப்பு! – தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!
, திங்கள், 22 நவம்பர் 2021 (10:48 IST)
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழியை சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20% இட ஒதுக்கீடு என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் பயிற்று மொழி குறித்த விவரங்களை அறிவதற்காக நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்று மொழி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 10ம் வகுப்பு வரை வகுப்புவாரியாக மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்பது அதில் இடம்பெறும் என்றும், மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணையத்தில் பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென ரீசார்ஜ் ப்ளான் விலையை ஏற்றிய ஏர்டெல்! – புதிய ப்ளான் விவரங்கள் உள்ளே..!