Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (11:02 IST)
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தகவல். 

 
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
 
இதனால் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.80க்கும், சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்கப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments