Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகம் போகலாம், தடுப்பூசிக்கு அனுமதி! – நாளை ஊரடங்கில் அனுமதி!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (12:37 IST)
நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் சென்னையில் அம்மா உணவகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 9 மணிக்கு உணவகங்கள் மூடப்படும் நிலையில் மீண்டும் திங்கட்கிழமை காலையில்தான் திறக்கப்படும்.

இதனால் ஆதரவற்றவர்கள், ஏழை, கூலி தொழிலாளிகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கத்தை விட அதிகமான மக்கள் உணவு அருந்த வருவார்கள் என்பதால் உணவுகளை கூடுதலாக சமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளை முழு ஊரடங்கு என்றாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments