Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வருமா சிறைவாசம்? இன்று வெளியாகிறது செந்தில் பாலாஜி ஜாமின் மனு தீர்ப்பு..!

Siva
வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:30 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்தார், ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர், உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை சில மாதங்கள் கடந்தது.

இதை அடுத்து, இரு தரப்பினரும் வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள் இன்று தீர்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சிறைவாசம் முடிவுக்கு வருமா? என்பது தெரியவரும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

ஜவாஹிருல்லா சரண் அடைய கால நீட்டிப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்: முழுவிவரங்கள்..!

இருமல் சளிக்கு மருந்தாக சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments