Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் வழக்கு - மலையாள நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு தள்ளுபடி.!!

Advertiesment
Siddaque

Senthil Velan

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:24 IST)
பாலியல் வழக்கில் மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  
 
பிரபல மலையாள நடிகரான சித்திக் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் பொதுச்செயலாளராக இருந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின் மலையாள துணை நடிகையான ரேவதி சம்பத் நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது மலையாள திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியது.

கடந்த 2016ம் ஆண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் அன்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதே ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். 
 
இதையடுத்து, மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை சித்திக் ராஜினாமா செய்தார். மேலும் துணை நடிகை அளித்த புகாரின் பேரில் சித்திக் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, சித்திக் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதாக தகவல்.. தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!