Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!

Siva
புதன், 20 மார்ச் 2024 (07:20 IST)
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று முதல் அதாவது மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் இதனை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து பணிகளும் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி உள்பட அனைத்து கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளும் இன்னும் முழுமையாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பதால் இன்னும் ஒரு நாளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பரபரப்பாக வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!

இன்று ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments