Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதவெறி பாசிசம் வீழும்! இந்தியா வெல்லும்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Advertiesment
MK Stalin

sinoj

, செவ்வாய், 19 மார்ச் 2024 (19:58 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
இந்த நிலையில்  நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்திவருவதுடன், பிரசாத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றன.

தமிழ் நாட்டில் திமுக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் தொகுதிப் பங்கீடுகள் கையெழுத்தாகின. 

திமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில்,  இந்தியா காப்பாற்றப்பட #INDIA கூட்டணி வெற்றிபெற வேண்டும்" என்ற பரந்த சிந்தனையோடு நம் கூட்டணிக்கு மனமுவந்து ஆதரவை வழங்கியிருக்கும் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் என் நன்றி. மதவெறி பாசிசம் வீழும்! இந்தியா வெல்லும்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திமுக தொண்டர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

''தனிப்பட்ட நலனை முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை எதிர்த்து உறுதியோடும் ஒற்றுமையோடும் தன் பயணத்தைத் தொடர்கிறது நமது கொள்கைக் கூட்டணி. "தொகுதி ஒதுக்கீடு முக்கியம் இல்லை, இந்தியா காப்பாற்றப்பட #INDIA கூட்டணி வெற்றிபெற வேண்டும்" என்ற பரந்த சிந்தனையோடு நம் கூட்டணிக்கு மனமுவந்து ஆதரவை வழங்கியிருக்கும் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் என் நன்றி. மதவெறி பாசிசம் வீழும்! இந்தியா வெல்லும்!
 
இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும்,மதவெறி சக்திகளை வீழ்த்தி மத நல்லிணக்கம் தழைக்கவும்,அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும்தி.மு.க.வுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர்அனைவரையும் வரவேற்கிறேன்.

பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - மாநில உரிமைகளைப் பறித்தஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத்தேர்தல் களமே சரியான வாய்ப்பு! 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்,ஊரக உள்ளாட்சித் தேர்தல், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல்என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். கொள்கை அடிப்படையிலான கூட்டணியாக ஐந்தாவது முறையாகத்தொடர்கிறோம்!ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல்ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.
 
தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும்யாரை வீழ்த்த வேண்டும் என்பதைத் உணர்ந்து,உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பு.மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும்நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போனநிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க கூட்டணிக்குப்பக்கபலமாக இருப்போம் எனத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்றமுன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும்,ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றி.“நாற்பதும் நமதே ! நாடும் நமதே!” என்கிறவகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும்,ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள்அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு- இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு