Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் யாருக்கு தபால் வாக்குகள்.. என்ன செய்ய வேண்டும்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Siva
புதன், 20 மார்ச் 2024 (07:16 IST)
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில் 7 கட்டமாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தயார் செய்து இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்களுக்கு மட்டும் தபால் வாக்குகள் அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் செலுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
இந்த அறிவிப்பின்படி சிவில் விமான போக்குவரத்து, மெட்ரோ ரயிலில் பணி செய்யும் ஊழியர்கள், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. 
 
மேலும் அந்தந்த துறையில் உள்ள பணியாளர்களை ஒருங்கிணைக்க ஒரு அதிகாரியை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்த வசதியாக 12டி என்ற விண்ணப்பம் ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 
 
எனவே அத்தியாவசிய பணியில் இருக்கும் ஊழியர்கள் 12டி என்ற விண்ணப்பத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பெற்று தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments