Publish Date: Tue, 23 Aug 2022 (07:58 IST)
Updated Date: Tue, 23 Aug 2022 (07:59 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்மமானது என்று முடிவு செய்யப்பட்டதை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது
இந்த ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்த நிலையில் இன்று விசாரணை அறிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஆறுமுகசாமி ஆணையத்தின் கால நீடிப்பு நாளையுடன் முடிவடைந்ததையடுத்து இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 14 முறை ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் இதற்கு மேல் காலநீட்டிப்பு செய்யப்படாது என்பதால் இன்று ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை இறுதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது