Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி விருந்தில் கலந்து கொள்ளும் தமிழக தலைவர்கள் யார் யார்?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:08 IST)
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படவுள்ள நிலையில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. பாஜக மீது பெரும் அதிருப்தி மக்களிடையே இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்க காரணமாக உள்ளது
 
இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இன்று டெல்லியில் விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டனர்.
 
இந்த நிலையில் பாஜகவின் கூட்டணியின் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி பாமகவில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், தேமுதிகவில் இருந்து பிரேமலதா விஜயகாந்த், எல்கே.சுதீஷ், புதிய தமிழகம் கட்சியில் இருந்து டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜிகே வாசன், மற்றும் சரத்குமார், ஜான் பாண்டியன், கார்த்திக், என்ஆர் தனபாலன், பூவை ஜெகன்மூர்த்தி, தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆட்சி அமைக்க ஒரே ஒரு எம்பி வைத்திருக்கும் கட்சி கூட முக்கியம் என்பதால் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த விருந்தின்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சர் பதவிக்கும் இப்போதே துண்டு போட்டு வைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments