Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீட்டுக்கு பதிலாக பதவி.. மனிதநேய மக்கள் கட்சியை சமாதானப்படுத்திய ஸ்டாலின்..!

Siva
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:08 IST)
திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டு கேட்டுக் கொண்டிருந்த நிலையில் சீட்டுக்கு பதிலாக அக்கட்சியின் தலைவருக்கு பதவி வழங்கி திமுக தலைவர் ஸ்டாலின் சமாதானப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளை திருப்தி செய்து அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணியில் திமுக தலைவர்கள் உள்ளனர் என்பதும் அதில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் சமது தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி கேட்டதாகவும் கூறப்பட்டது. 
 
ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கு தொகுதிகள் கொடுக்கவே சிக்கல்கள் இருக்கும்போது மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் கொடுக்க முடியாத நிலையை விளக்கிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அதற்கு பதிலாக அவரை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக நியமனம் செய்தார் 
 
இது தொடர்பாக தமிழக அரசு இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டு அவரது நியமனத்தை உறுதி செய்துள்ளது. ஹஜ் கமிட்டியின்  தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல் சமது தற்போது மணப்பாறை தொகுதிகள் எம்எல்ஏவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments