எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
மேலும் சில கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இங்குள்ள மா நில கட்சிகள்தான் தேசிய கட்சிகளின் மீது ஏறி சவாரி செய்கின்றன. ஒரு சில கட்சிகள் இருபுறமும் கூட்டணி பேரத்தைப் பேசி வருகின்றன. எந்தக் கட்சியாக இருந்தாலும் அங்கு பேரத்தை முடித்துவிட்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியுடனான கூட்டணியை முறியடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.