Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 18-ம் தேதி பொதுவிடுமுறை: தமிழக அரசு அரசாணை

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (09:01 IST)
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழக மக்கள் அனைவரும் ஓட்டு போட வசதியாக அன்றைய தினம் பொதுவிடுமுறை என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 
 
ஏப்ரல் 17ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறை நாள், ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் விடுமுறை நாள், ஏப்ரல் 19ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறை நாள் அதனையடுத்து ஏப்ரல் 20, 21 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தொடர்ச்சியாக ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 21 வரை ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா அல்லது சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே வழக்கத்தை விட குறைவான வாக்குப்பதிவே நடைபெற வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
 
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் திங்கட்கிழமை என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் பெரும்பாலானோர் வெளியூர் சென்றுவிட்டனர் என்பதும் அதனால் வாக்குபதிவு குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் எதிர்பார்த்த வாக்குப்பதிவு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments