Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராட்டம் போராட்டம்னா... பொருளாதாரம் எப்படி வளரும்? கொந்தளித்த தமிழிசை!

Advertiesment
தமிழிசை
, சனி, 31 ஆகஸ்ட் 2019 (13:19 IST)
வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் கொந்தளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. 
 
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் ஒன்றினைக்கப்படும் எனவும், கனரா பேங்க் மற்றும் அலகாபாத் வங்கிகளும் இணைக்கப்படும் என்றும், ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் இணைக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார். 
webdunia
மேலும், சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்தியன் வங்கியும் ஆலகாபாத் வங்கியும் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த கையோடு, இந்த இணைப்பு நடவடிக்கைகளால் ஊழியர்களின் வேலைக்கு எந்த பிரச்சனையும் வராது என தெரிவித்தார். 
 
இருப்பினும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழிசை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். தமிழிசை இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, 
webdunia
வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்ட அறிவிப்பு ஏன்? போராட்டம்? போராட்டம்? என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா? என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைதானத்தில் மயங்கி விழுந்த பிரபல கிரிக்கெட் விரர்: ரசிகர்கள் பதற்றம்