Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பனே விநாயகா... பிள்ளையாரிடம் தேர்தலுக்கு பிட்டு போட்ட முருகன்!!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (10:41 IST)
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி பாஜகவிற்காக சிறப்பு வேண்டுதல் ஒன்றை வைத்துள்ளார். 
 
கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்து வழிபடுதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்தது. அரசின் தடைக்கு எதிராக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டவை தொடர்ந்து சிலை வைக்க அனுமதி கோரி வந்தன. 
 
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசின் உத்தரவை பின்பற்ற உத்தரவிட்டது. எனவே எந்த ஆரவாரமும் இன்றி மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். 
 
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி, சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற விநாயகரிடம் பிரார்த்தனை செய்தேன் என கூறியுள்ளார். 
 
தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என இருக்கும் நிலையில் முருகன் பிள்ளையாரிடம் வெற்றி பெற கோரியுள்ளது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments